Services

Home Services

Daily Activities

பஸுவின் ஸ்ரீரத்தில் 14 லோகங்களும் ஸகல தேவதைகளும் இருப்பதாக ராஸ்த்ரங்கள் மூலம் அறிகிறோம். பஸு ஸம்ரக்ஷனம் மிகப்பெரிய புண்யமாக கூறப்பட்டுள்ளது. கோதானத்தால் ஸகல பாவங்களும் போய்விடுகின்றது. ஸகல தேவதைகளையும், பித்ருக்க ளையும் கோ. தானம் த்ருப்தி செய்கிறது, கோ தானம் செய்யமுடியாதவர்கள் கோ ஸம்ரக்ஷணம் செய்யலாம்.
குருகுல கல்வி முறையானது வேத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. உபநிடதங்கள் பல குருகுலங்களைப் பற்றி கூறுகிறது. யாக்ஞவல்கியர், வசிட்டர், வியாசர், வாருணி போன்ற குருக்கள், குருகுலங்கள் நடத்தி வந்ததை உபநிடதங்கள் விரிவாக கூறுகிறது. 8 முதல் 12 வயதிற்குள் குழந்தைகளுக்கு உபநயனம் எனும் சமயச் சடங்கு செய்து முடித்த பின்பே குருகுலத்திற்கு தங்கள் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவர். கல்வி பயின்று முடியும் வரை மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சர்ய விரதம் கடைபிடிக்க வேண்டும். குருகுலங்களின் மேம்பாட்டிற்கு அரசர்கள், வணிகர்கள், மற்றவர்கள் பொருள் உதவி செய்தனர்.
வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் முதன்மையானதும் காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்காதர திலகர்நிரூபித்துள்ளார். இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமசஸ்கிருதத்தில் அறிதல் என்று பொருளாகும். வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும். இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகியவை தான் அடிப்படையில் வேதங்களாகக் கருதப்பட்டன.
விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்ம பிதாமகர் யுதிஷ்டிரருக்குபோர்க்களத்தில் போதித்த ஆயிரம் திருமாலின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம். மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயம். 'ஸஹஸ்ரம்' என்றால் ஆயிரம். 'நாமம்' என்றால் பெயர். ஸஹஸ்ரநாமப் பகுதி மட்டும் 'அனுஷ்டுப்' என்ற வடமொழி யாப்புவகையிலுள்ள் 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது. இது இந்து சமயப் பழங்கால நூல்களுக்குள் தலைசிறந்த இறைவணக்கமாக இன்றும் புழங்கப்பட்டு வருகிறது. இயற்றியவர் வியாசர்- மகாபாரதம், மற்றும் 18 புராணங்கள், 18 உபபுராணங்கள் இவற்றையெல்லாம் இயற்றிய வியாசருக்கு இந்து மதம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய ஒவ்வொரு நூலிலும் பல அரிய பெரிய தோத்திரங்களை அடக்கியுள்ளார். அப்படித்தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் மகாபாரதத்தின் ஒரு அத்தியாயமாக அடங்கியுள்ளது. தொகுத்து உரைத்தவர் பீஷ்மர்- இது சத்துவ குணம் நிறைந்த பீஷ்மரால் சத்வகுணம் நிறைந்த யுதிஷ்டிரருக்கு போதிக்கப்பட்ட சத்வ வழிபாட்டுக்குகந்த தோத்திரம். உலகத்தில் தர்மத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று பட்டியலிட்டுக் கூறும் பாகவதம் [1]அப்பட்டியலில் பீஷ்மரைச் சேர்த்திருப்பதிலிருந்து பீஷ்மரின் ஆன்மிகப் பெருமை விளங்கும். அதனாலேயே மகாபாரதப் போருக்குப் பின் தர்மத்தின் நெளிவு சுளுவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபொழுது, 'வா, இதை பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்' என்று கண்ணன் அவரை பீஷ்மரிடம் அழைத்துச் செல்கிறார்

Weekly Activities

நம் சரீர ஆரோக்யம் சிறப்பக அமைய சூரிய நமஸ்காரம் சிறப்பக அடைகிறது இது தனியாக ஒரு பரிஷணம் உள்ளது இதை காதால் கேட்பதாலும் பல பாவங்களும் நிவர்த்தியாகும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நம் வேத பாட சாலையில் வித்யாரத்திகள் சூரிய நமஸ்கார பாராயணம் செய்து 136 நமஸ்காரங்கள் செய்து வருகிறார்கள்.

Fortunately

மார்கண்டேய புராணத்தில் மிக சிறப்பான சக்தி வழிபாடு கூறப்பட்டுள்ளது. அதற்கு துர்கா சப்தசதி என்று பெயர். சப்தசதி என்றால் 700 என்று. பொருள்படும். இதை அஷ்டமி தோறும் கலசத்தில் துர்கையை ஆவாஹனம் செய்து வித்யாரத்திகள் பாராயணம் செய்வார்கள்.
சத்ரயாகமும் அஷ்வமேத யாஹமும் முன் காலங்களில் மிகச்சிறப்பாக நடந்து வந்தன. கலியுகத்தில் அவை நடப்பதில்லை. சாஸ்திரப்படி அதற்குண்டான மந்திரங்களை பாராயணம் செய்வதாலே அந்த யாஹங்களை செய்த முழுப்பலனை அடையமுடியும், இந்த பாராயணத்தால் எல்லோருக்கும் அஷ்வமேதயாஹம் செய்த பலன் கிடைக்கும். ஏகாதசிதோறும் நமது பாடசாலையில் அச்சித்ர அஷ்வமேத பாராயணம் நடத்தப்படுகிறது.
வேதாநத்தத்தின் முழு சாரமான உபநிடதங்களை பாராயணம் செய்வதால் சித்த வித்தி ஏற்பட்டு மனத்தெளிவு கிட்டும். நமது பாடசாலையில் துவாதசி தோறும் உபநிடதங்கள் பாராயணம் நடத்தப்படுகிறது.
சைவ வழிபாட்டில் ஒவ்வொரு பக்‌ஷமும் ப்ரோதஷதினம் மிக சிறப்புடைதாகும். அதுசமயம் கிருஷ்ண யஜூர் வேதத்திலும் ஶ்ரீருத்ரத்தை பாராயனம் செய்வதால் பாபங்களுமும் ரோகங்களும் விலகி ஆனந்தமான வாழ்க்கை அமையும். நமது பாடசாலையில் ஒவ்வொரு ப்ரோதஷத்திற்கும் கலச ஸ்தாபனம் செய்து 11 முறை ஸ்ரீருத்ரபராயனம் செய்து சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்படும் விபுதிதான் உண்மையான விபுதி. அதற்கு விரஜா ஹோமம் என்ற ஹோமமும் செய்ய வேண்டும் . அப்படி ஹோமம் செய்யப்பட்ட விபூதியை தரித்துக் கொள்வதால் மனதில் ஏற்படும் மலங்கள் விலகி உள்ளும் புறமும் சுத்தம் ஏற்படுத்தும் இந்த ஹோமம் மாத சிவராத்திரியில் இந்த ஹோமம் செய்யப்பட்டு அன்பர்களுக்கு பிரசாதமாக அனுப்பப்டுகிறது.
ஒவ்வொரு மாதமும் லோக ஷேமத்திற்காக சங்கடஹர சதர்த்தி தினத்தில் நமது வேதபாடசாலையால் கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.