குருகுல கல்வி முறையானது வேத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. உபநிடதங்கள் பல குருகுலங்களைப் பற்றி கூறுகிறது. யாக்ஞவல்கியர், வசிட்டர், வியாசர், வாருணி போன்ற குருக்கள், குருகுலங்கள் நடத்தி வந்ததை உபநிடதங்கள் விரிவாக கூறுகிறது. 8 முதல் 12 வயதிற்குள் குழந்தைகளுக்கு உபநயனம் எனும் சமயச் சடங்கு செய்து முடித்த பின்பே குருகுலத்திற்கு தங்கள் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவர். கல்வி பயின்று முடியும் வரை மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சர்ய விரதம் கடைபிடிக்க வேண்டும். குருகுலங்களின் மேம்பாட்டிற்கு அரசர்கள், வணிகர்கள், மற்றவர்கள் பொருள் உதவி செய்தனர்.